Menu

உடல் திணிவுச்சுட்டி வகைககள் (BMI)

குறைந்த நிறை = < 18.5 (உங்களது உடல் நிறையானது பரிந்துரைக்கப்பட்ட சாதாரண உடல் நிறையைவிட குறைவானது. நீங்கள் போஷாக்கான உணவுகளை உண்பதுடன் போதுமான அளவு உடற்பயிற்சிகளும் மேற்கொள்ளவேண்டும். மேலும் வாசிக்க)

சாதாரண நிறை = 18.5 – 22.9 (உங்களது உடல் நிறையானது பரிந்துரைக்கப்பட்ட சாதாரண நிறையளவில் உள்ளது. போதுமானளவு உடற்பயிற்சிகளுடன் உங்கள் உடல் நிறையை பேணவும். மேலும் வாசிக்க)

அதிக உடல் நிறைக்கான அபாயம் = 23 – 24.9 (உங்களது உடல் நிறையானது பரிந்துரைக்கப்பட்ட சாதாரண நிறையளவில் உள்ளது. மேலதிக உடற்பயிற்சிகள் மற்றும் சரியான உணவுமுறைகள் மூலம் இதனை குறைத்துக்கொள்ள முயற்சிசெய்யவும். மேலும் வாசிக்க)

அதிக உடல் நிறை = 25 – 29.9 (உங்களது உடல் நிறையானது பரிந்துரைக்கப்பட்ட சாதாரண நிறையளவை விட அதிகமாக உள்ளது. மேலதிக உடற்பயிற்சிகள் மற்றும் சரியான உணவுமுறைகள் மூலம் இதனை குறைத்துக்கொள்ளவும். மேலும் வாசிக்க)

அதீத உடற்பருமன் = BMI 30 அல்லது அதிகம். (உங்களது உடற்பருமன் பரிந்துரைக்கப்பட்ட சாதாரண நிறையளவை விட மிகவும் அதிகமாக உள்ளதுடன் இது நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் முதலிய பல்வேறு நோய்களுக்கான ஆபத்து காரணியாக உள்ளது. மேலதிக உடற்பயிற்சிகள், சரியான உணவுமுறைகள் மற்றும் வைத்திய ஆலோசனையின்படி இதனை குறைத்துக்கொள்ளவும். மேலும் வாசிக்க)

உடல் திணிவுச் சுட்டி (BMI) என்றால் என்ன? உடல் திணிவுச் சுட்டி (BMI) என்பது உங்களது உயரம் மற்றும் நிறையைப் பயன்படுத்தும், உங்களது உடல் நிறை ஆரோக்கியமானதா என்பதைக் அளவிடும் அளவீடாகும். வளர்ந்த நபரின் கிலோ கிராமினாலான உடல் நிறையை, மீற்றர் வர்க்கத்திலான உயரத்தினால் வகுப்பதால் BMI கணிக்கப்படுகின்றது. உதாரணமாக, ஒரு BMI 25 என்பது 25kg/m2 என்பதைக் குறிக்கின்றது. மேலும் வாசிக்க