Menu

போஷாக்குப் பிரிவுக்கு அன்புடன் வரவேற்கின்றோம்

போஷாக்குப் பிரிவானது சுகாதார அமைச்சின் சார்பில் நாடளாவிய ரீதியில் போஷாக்கு இடையீடுகளை ஒருங்கிணைக்கும் மையப் புள்ளியாக விளங்குகின்றது. நாம் போஷாக்கு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள, தொடர்புடைய மற்றைய அமைச்சுக்கள், அபிவிருத்தி பங்குதாரர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுகின்றோம்.

 

தேசிய போஷாக்குக் கொள்கை, சம்பந்தப்பட்ட உத்திகள் மற்றும் வழிகாட்டுதல்கள் முதலிய போஷாக்குதொடர்பான கொள்கைகளை விஉருவாக்கலும் செயற்படுத்துவதும் எமது முதன்மையான பொறுப்பாக விளங்குகின்றது.

 

இலங்கை மக்கள், போஷாக்கு ரீதியில் உறுதியான தேசத்தை இலங்கை குடிமக்கள் கட்டியெழுப்பும் வகையில் போஷாக்குப் பிரிவானது இடையறாது பணியாற்றியுள்ளது.

தேசிய போசாக்கு மாதம் 2025

2025 ஆம் ஆண்டில் தேசிய போசாக்கு மாதம் “காய்கறிகள் மற்றும் பழங்கள்: எப்போதும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளது, இதன் நினைவு நிகழ்வு 2025 ஜூன் முதல் வாரத்தில் கொழும்பில், தேசிய, மாகாண மற்றும் பிராந்திய மட்டங்களில் போசாக்கு தொடர்பான பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்படவுள்ளது.

இந்த ஆண்டின் கொண்டாட்டத்தின் கருப்பொருளான “காய்கறிகள் மற்றும் பழங்கள்: எப்போதும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்” என்பது, மக்கள் மத்தியில் நிலையான, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பழக்கங்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த கவனம் உலகளாவிய ஊட்டச்சத்து முன்னுரிமைகள் மற்றும் இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாட்டின் மும்மடங்கு சுமை மற்றும் தொற்றாத நோய்களின் அதிகரிக்கும் போக்குகளை எதிர்கொள்ளும் தேசிய நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகிறது. இந்த நிகழ்வு, பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாமல் உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்காக ஆதாரபூர்வமான கொள்கை வகுப்பை ஊக்குவிப்பதற்கும் ஒரு தளமாக அமையும்.

 

உணவு அடிப்படையிலான உணவுமுறை வழிகாட்டுதல்கள்:

 

பொது உணவுக்கும் போஷாக்கிற்குமான ஒரு அடிப்படையை கட்டியெழுப்ப கலாசார ரீதியில் பொருத்தமான சான்றடிப்படையிலான பரிந்துரைகள், ஆரோக்கியமான உணவு முறைகளையும் வாழ்க்கை முறைகளையும் வளர்க்கும் பொருட்டு சுகாதார மற்றும் விவசாய கொள்கைகள் மற்றும் போஷாக்கு தொடர்பான கற்கை நிகழ்ச்சிகள்.

 

14 வழிகாட்டுதல்கள்

  1. சரியான அளவை சமநிலையில் பேணும் பொருட்டு தினசரி உணவுகளை வளப்படுத்துதல்.
  2. சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளுக்குப் பதிலாக, புழுங்கிய அல்லது குறைந்தளவு தீட்டப்பட்ட அரிசி, முழு தானியங்கள் மற்றும் அவற்றின் தயாரிப்புக்களை உண்ணுதல்.
  3. தினசரி குறைந்தது இரு மரக்கறி வகைகள், ஒரு பச்சை இலை மரக்கறி மற்றும் இரண்டு பழங்களை உண்ணுதல்.
  4. மீன் அல்லது முட்டை அல்லது குறைந்த கொழுப்புடைய இறைச்சியை பருப்புவகைகளுடன் ஒவ்வொரு உணவிலும் சேர்த்துக்கொள்ளுதல்.
  5. தூய்மையான பால் அல்லது அதன் புளித்த தயாரிப்புக்களை உட்கொள்ளுதல்.
  6. ஒரு கைப்பிடியளவு கொட்டைகள் அல்லது எண்ணெய்த்தன்மையுள்ள விதைகளை தினமும் உண்ணுதல்.
  7. உப்புச்சுவையுள்ள உணவுகளையும், உணவிற்கு உப்பு சேர்த்துக்கொள்வதையும் கட்டுப்படுத்துதல்.
  8. சீனி உள்ளக்கப்பட்ட பானங்கள், பிஸ்கட்டுகள், கேக் வகைகள், இனிப்புப் பண்டங்கள் மற்றும் இனிப்புச் சுவையூட்டிகளை உள்ளெடுப்பதை கட்டுப்படுத்துதல்.
  9. குடிநீரானது மிக ஆரோக்கியமான பானமாகும்: 8 முதல் 10 கிளாஸ்கள் (1.5 - 2.0 லீற்றர்கள்) நாள் முழுதும் குடித்தல்.
  10. உற்சாகமாக இருத்தல்: தினசரி 20 நிமிடங்களாவது உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல்.
  11. தினமும் 7 - 8 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாகத் தூங்குதல்.
  12. சுத்தமானதும் பாதுகாப்பானதுமான உணவை உண்ணுதல்.
  13. புதிதானதும் வீட்டிற் தயாரிக்கப்பட்டதுமான உணவை உண்ணுதல்: பதப்படுத்திய மற்றும் மிகவும் பதப்படுத்திய உணவுகளைக் கட்டுப்படுத்துதல்.
  14. எப்பொழுதும் பொதிசெய்யப்பட்ட உணவுகளின் சிட்டைகளை வாசித்தல்.

எதிர்வரும் நிகழ்வுகள்

போஷாக்குப் பிரிவு, சுகாதார அமைச்சின் எதிர்வரும் நிகழ்வுகள்

அனைத்தையும் படியுங்கள்

அனைத்தையும் படியுங்கள்

தேசிய போசாக்கு மாதம்

காய்கறிகள் மற்றும் பழங்கள்: எப்போதும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

மேலும் வாசிக்க
உடல் திணிவுச் சுட்டி (BMI) என்றால் என்ன? உடல் திணிவுச் சுட்டி (BMI) என்பது உங்களது உயரம் மற்றும் நிறையைப் பயன்படுத்தும், உங்களது உடல் நிறை ஆரோக்கியமானதா என்பதைக் அளவிடும் அளவீடாகும். வளர்ந்த நபரின் கிலோ கிராமினாலான உடல் நிறையை, மீற்றர் வர்க்கத்திலான உயரத்தினால் வகுப்பதால் BMI கணிக்கப்படுகின்றது. உதாரணமாக, ஒரு BMI 25 என்பது 25kg/m2 என்பதைக் குறிக்கின்றது. மேலும் வாசிக்க