Menu

முதியோர் ஊட்டச்சத்து

- Get directions

“சமூகத்தில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் பராமரிப்பு வழங்குநர்களுக்கான ஊட்டச்சத்து வழிகாட்டி”, “குடியிருப்பு பராமரிப்புக்கான தேசிய ஊட்டச்சத்து தர நிர்ணயங்கள்” மற்றும் “வயதான மக்களுக்கான குடியிருப்பு பராமரிப்புக்கான தேசிய ஊட்டச்சத்து தர நிர்ணயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்” ஆகியவை மூன்று வெளியீடுகளாகும் இலங்கையில் அதிகரித்து வரும் வயதான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவு, முக்கியமாக அவர்களின் ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்துகிறது. விரிவான மற்றும் பகுத்தறிவு ஊட்டச்சத்து பராமரிப்பை வழங்குவதற்காக முதியோர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களையும் சென்றடைய இந்த வெளியீடுகள் தொடங்கப்படும்.

உடல் திணிவுச் சுட்டி (BMI) என்றால் என்ன? உடல் திணிவுச் சுட்டி (BMI) என்பது உங்களது உயரம் மற்றும் நிறையைப் பயன்படுத்தும், உங்களது உடல் நிறை ஆரோக்கியமானதா என்பதைக் அளவிடும் அளவீடாகும். வளர்ந்த நபரின் கிலோ கிராமினாலான உடல் நிறையை, மீற்றர் வர்க்கத்திலான உயரத்தினால் வகுப்பதால் BMI கணிக்கப்படுகின்றது. உதாரணமாக, ஒரு BMI 25 என்பது 25kg/m2 என்பதைக் குறிக்கின்றது. மேலும் வாசிக்க