Menu

ஊட்டச்சத்து பிரிவு & FBDG

பணிப்பாளரின் தகவல்

போஷாக்குப்பிரிவு ஒவ்வொரு இலங்கையரினதும் அதியுச்ச போஷாக்கு நிலைக்குப் பொறுப்பானதாக சுகாதார அமைச்சின் தேசிய ஒருங்கிணைப்புப் மையமாக பணியாற்றுகின்றது. போஷாக்கின் முக்கியத்துவமானது நாட்டின்  மனித மனித பொருளாதார அபிவிருத்தியின் குறிகாட்டியாகவும் மனித அடிப்படை மூலமாகவும் அமையும் என்பது  மிகைப்படுத்தப்பட்டதல்ல. அடிப்படை மூலமாகவும் அமையும் என்பது  மிகைப்படுத்தப்பட்டதல்ல. போஷாக்கு ஆற்றும் முக்கியபங்கை அங்கீகரிப்பதற்காக, முழுநாட்டின் போஷாக்கிற்குமான மைய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளதுடன், அது கட்டமைப்பிலும் கொள்ளளவிலும் மேலும் வளர்ச்சியடைந்தது, எம் எல்லோரையும்…

ஊட்டச்சத்து பிரிவு என்பது சேவைகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கும் மற்றும் முழு நாட்டிற்கும் ஊட்டச்சத்து தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் மைய புள்ளியாகும். இது சுகாதார அமைச்சகத்திற்குள் தொடர்புடைய பணியகங்களை ஒருங்கிணைக்கும் நிறுவனம் ஆகும். மேம்பட்ட சேவை வழங்கலுக்கான பல துறை கூட்டாண்மைகளுடன், ஊட்டச்சத்து உணர்திறன் மற்றும் குறிப்பிட்ட தலையீடுகளின் திட்டமிடல், செயல்படுத்தல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்வதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், தேசிய ஊட்டச்சத்து கொள்கை, உணவு அடிப்படையிலான உணவு வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் தொடர்புடைய மனித வளங்களின் திறனை வளர்ப்பதோடு கூடுதலாக ஊட்டச்சத்து பராமரிப்பு சேவைகளுக்கு தேவையான தரநிலைகள் உள்ளிட்ட கொள்கைகளை வகுப்பதற்கும் இந்த பிரிவு பொறுப்பாகும். இலங்கையின் அனைத்து குடிமக்களாலும் உகந்த ஊட்டச்சத்தை அடைவதற்கான நோக்கத்துடன் வாழ்க்கைச் சுழற்சி அணுகுமுறையை பின்பற்றுவதற்கு இந்த பிரிவு முக்கியத்துவம் அளிக்கிறது.

நாட்டின் போஷாக்கு தொடர்பான நடவடிக்கைகளுக்கான மையப்புள்ளியானது அண்மைக் காலம்வரை போஷாக்குப் பிரிவு மற்றும் போஷாக்கு ஒருங்கிணைப்பு பிரிவு என இரண்டு தனித்தனி அலகுகளாக செயற்பட்டது. போஷாக்கை ஒரு முன்னுரிமைக்குரிய அங்கமாக அங்கீகரிக்கும் பொருட்டு, சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் போஷாக்குப்பிரிவானது 1997ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

இது கொள்கைகளை உருவாக்குவதற்கும் போஷாக்கு தொடர்பான பாரிய நிகழ்ச்சித் திட்டங்களை நாட்டில் திட்டமிடுவதற்கானதுமான மையப்புள்ளியாக சேவையாற்றியது.

பல ஆண்டுகளாக இதன் பல்வேறு பங்களிப்புகளுள், போஷாக்கு அலகுகளை போதனா வைத்தியசாலைகளில் நிறுவுதல், தற்போது  "தேசிய போஷாக்கு மாதம்" ஆகத் தொடர்கின்றதை "தேசிய போஷாக்கு வாரம்" என முன்னெடுத்தல், வேலைத்தளங்களில் ஆரோக்கியமான சிற்றூண்டிச்சாலைகளை தொடங்குதல், உணவை மையப்படுத்திய உணவுமுறை வழிகாட்டுதல்கள், நோயை மையப்படுத்திய உணவுமுறை வழிகாட்டுதல்கள், பொதியாக்கப்பட்ட உணவுகளை சந்தைப்படுத்தலுக்கான போஷாக்கு சுயவிபர மாதிரிகள் என்பவற்றிற்கான அபிவிருத்தி மற்றும் வழிகாட்டுதல்களின் திருத்தங்கள் முதலியன முன்னுரிமை பெறுகின்றன. மக்கள் தொகையின் போஷாக்கு நல்வாழ்வென்பது, பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்புக்களைப் பாதிக்கும் பல காரணிகளால் தாக்கம் செலுத்தப்படுகின்றது என்பதை உணர்ந்துகொண்டு, சகல போஷாக்கு உணர்திறன் மிக்க மற்றும் தனித்துவமான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பொருட்டு போஷாக்கு ஒருங்கிணைப்பு பிரிவானது திட்டமிடல் அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டது. 2001ல் போஷாக்கு ஒருங்கிணைப்பு பிரிவானது, போஷாக்கு தொடர்பான இலக்குகளை அடையும்பொருட்டு ஒன்றிணைந்து தொழிற்படுவதை எளிதாக்குதல் மற்றும் ஒத்திசைத்தல் பொருட்டு, சுகாதார அமைச்சின் பல்வேறு போஷாக்கு தொடர்பான பிரிவுகள் (போஷாக்கு பிரிவு, குடும்ப சுகாதார பணியகம், சுகாதாரக் கல்வி பணியகம், தொற்றா நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு, தோட்டம் மற்றும் நகர்ப்புற சுகாதாரப் பிரிவு, மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம், இளைய, முதியோர் மற்றும் ஊனமுற்றோர் நலப்பிரிவு, உணவுக் கட்டுப்பாட்டு அலகு மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகள்) மற்றும் தொடர்புபட்ட மற்றைய அமைச்சுக்கள், அரசு சாரா நிறுவனங்களாற் செயற்படுத்தப்பட்ட சகல தனித்துவமான போஷாக்குத் தொடர்பான இடைத்தொடர்புகளை ஒருங்கிணைப்பதற்காக சுகாதார அமைச்சின் போஷாக்கும் பொதுநலமும் பிரிவிற்கு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதி விசேட வர்த்தமானி எண் 1215/14 ன் கீழ் இடமாற்றப்பட்டது. அமைச்சின் தற்கால தேவைகளுக்கு அமைய, HP/DP/06/2018 சுற்றறிக்கைக்கு இணங்க இரு பிரிவுகளும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே அலகாக  "போஷாக்கு பிரிவு" என 2018/10/26 முதல் செயற்படும்.

உடல் திணிவுச் சுட்டி (BMI) என்றால் என்ன? உடல் திணிவுச் சுட்டி (BMI) என்பது உங்களது உயரம் மற்றும் நிறையைப் பயன்படுத்தும், உங்களது உடல் நிறை ஆரோக்கியமானதா என்பதைக் அளவிடும் அளவீடாகும். வளர்ந்த நபரின் கிலோ கிராமினாலான உடல் நிறையை, மீற்றர் வர்க்கத்திலான உயரத்தினால் வகுப்பதால் BMI கணிக்கப்படுகின்றது. உதாரணமாக, ஒரு BMI 25 என்பது 25kg/m2 என்பதைக் குறிக்கின்றது. மேலும் வாசிக்க