Menu

தேசிய போசாக்கு மாதம் 2021

- Get directions

தேசிய போஷாக்கு மாதம் 2021 ஆனது, இந்த கோவிட்19 தொற்றுநோய் காலப்பகுதியில் முறையான போஷாக்கை ஆரோக்கியமான உணவுமுறை மூலம் பெற்றுக்கொள்வதை வலியுறுத்தும் வகையில் “பாதுகாப்பிற்கான போஷாக்கு” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ளது. ஆரோக்கியமான உணவுமுறையானது எமது நிர்ப்பீடனத் தொகுதியின் முறையான சமநிலையைப் பேணுதலில் முக்கிய பங்குவகிக்கின்றது. ஒரு ஆரோக்கியமான உணவானது குடலின் நோயெதிர்ப்புப் பாதுகாப்புத் தொழிற்பாட்டினை ஊக்குவிப்பதுடன், தொகுதி ரீதியான அழற்சி செயற்பாட்டைக் குறைத்து நிர்ப்பீடனக் கலங்களின் முறையான தொழிற்பாட்டை உறுதிப்படுத்துகின்றது. ஆரோக்கியமற்ற உணவானது உணவுமுறையுடன் தொடர்புள்ள தொற்றாத நோய்களாகிய நீரிழிவு, புற்றுநோய், இருதயம் தொடர்பான நோய் என்பவற்றின் அச்சுறுத்தலை அதிகரிப்பதுடன் அழற்சியையும் அதிகரித்து சிலவேளை குறித்த சில தன்னெதிர்ப்பு நோய்களின் அச்சுறுத்தலையும் அதிகரிக்கின்றது.

 

ஆரோக்கியமாக உணவு உட்கொள்தலுக்கும் வாழ்க்கைமுறைக்குமான, 14 பொதுவான மற்றும் 4 வயதுக்கு தனித்துவமானதுமான முக்கிய தகவல்கள், கலாசாரத்திற்குப் பொருத்தமான, நாட்டிற்குத் தனித்துவமான ஆரோக்கியமானதொரு உணவு முறையை கைக்கொள்ளத் தேவையான வழிகாட்டுதலை, இலங்கையருக்கான உணவை மையப்படுத்திய உணவுமுறை வழிகாட்டுதல்கள் (FBDGs) வழங்குகின்றன. ஒட்டுமொத்த சுகாதாரம் மற்றும் நிர்ப்பீடனத்திற் பங்களிப்புச்செய்யும் ஐந்து முக்கிய தகவல்கள் இந்த 2021 தேசிய போஷாக்கு மாதத்தின்போது வலியுறுத்தப்படவுள்ளன.

 

  1. தினமும் சமநிலைப்படுத்திய சரியான அளவில் பல்வகைப்பட்ட உணவினை உட்கொள்ளுதல்
  2. சுத்திகரிக்கப்பட்ட தானியங்களுக்கும் அவற்றின் தயாரிப்புக்களுக்கும் பதிலாக முழு தானியங்கள், குறைவாகத் தீட்டப்பட்ட அல்லது புழுக்கிய அரிசி முதலான அவற்றின் தயாரிப்புக்களை உண்ணுதல்
  3. குறைந்தது இரண்டு மரக்கறிவகைகள், ஒரு பச்சிலை மரக்கறி மற்றும் இரண்டு பழவகைகளை தினமும் உண்ணுதல்
  4. ஒவ்வொரு உணவுவேளையிலும் மீன் அல்லது முட்டை அல்லது சவ்வற்ற இறைச்சியை பருப்புவகைகளுடன் உண்ணுதல்
  5. சீனியுள்ளடங்கிய பானங்கள், பிஸ்கட்டுகள், கேக்குகள், இனிப்புக்கள் மற்றும் இனிப்புச் சுவையூட்டிகளின் பாவனையைக் கட்டுப்படுத்துதல்

 

மேலதிக தகவல்களுக்கு, தயவுசெய்து போஷாக்குப்பிரிவு, சுகாதார அமைச்சினை 0112368320/21 அல்லது nutritiondivision@health.gov.lk எனும் மின்னஞ்சல் மூலம் அணுகவும்.

உடல் திணிவுச் சுட்டி (BMI) என்றால் என்ன? உடல் திணிவுச் சுட்டி (BMI) என்பது உங்களது உயரம் மற்றும் நிறையைப் பயன்படுத்தும், உங்களது உடல் நிறை ஆரோக்கியமானதா என்பதைக் அளவிடும் அளவீடாகும். வளர்ந்த நபரின் கிலோ கிராமினாலான உடல் நிறையை, மீற்றர் வர்க்கத்திலான உயரத்தினால் வகுப்பதால் BMI கணிக்கப்படுகின்றது. உதாரணமாக, ஒரு BMI 25 என்பது 25kg/m2 என்பதைக் குறிக்கின்றது. மேலும் வாசிக்க