தேசிய போசாக்குக் கொள்கை 2021 – 2030’ இன் அறிமுகம்
- Get directions‘தேசிய போசாக்குக் கொள்கை 2021 – 2030’ இன் அறிமுகம்
2030 ஆம் ஆண்டிற்குள் அனைத்து வகையான ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், சுகாதார அமைச்சின் போசாக்குப் பிரிவு, ‘தேசிய போசாக்குக் கொள்கை 2021 – 2030′ இனை திருத்தியமைத்து உருவாக்கியுள்ளது. இது 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய போசாக்குக் கொள்கையின் திருத்தப்பட்ட பதிப்பாகும் மற்றும் இது 2020 – 2030 தசாப்பத்திற்கான முன்மொழியப்பட்ட கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தப்பட்ட கொள்கை, அனைத்து பல்துறை ஒத்தழைப்பு மற்றும் கூட்டாண்மை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லா நேரங்களிலும், அவசர காலங்களில் ஊட்டச்சத்து ஊக்குவிப்பு உட்பட அனைத்து இலங்கையர்களின் சிறந்த போசாக்கு நிலைமையை பேணுவதற்கும், உணவுப் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கும், பாதுகாப்பான உணவுக்கான உரிமையைப் பாதுகாப்பதற்கான சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், நெறிமுறையற்ற சந்தைப்படுத்தலைத் தடுப்பதற்கும், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பாவனையை உறுதிப்படுத்துவதற்கும் அவசியமான மூலோபாயத் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை இந்தக் கொள்கை கொண்டுள்ளது.
இந்த தேசிய போசாக்குக் கொள்கையின் வெளியீட்டு விழா, மாண்புமிகு சுகாதார அமைச்சர் அவர்களின் தலைமைத்துவத்துடன் 2023 மே 03 ஆம் திகதி அன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (டீஆஐஊர்) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது.